
அன்பர்களே ,
WordPress photos குழுவிலிருந்து நான் Sadie .
நான் Photos கோப்பகத்தின் பங்களிப்பாளராகவும், குழுவின் மதிப்பீட்டாளராவாகும் செயல்படுகிறேன்.
இப்பதிவு தயாராகும் தருணத்தில் , இதுவரை 12,949 புகைப்படங்கள் உலகமுழுவதில் இருந்து இலவசமாக கோப்பகத்தில் பதியப்பட்டுள்ளது.
நீங்களும் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு கோப்பகத்தில் பதிவிடுவது என்று இப்பதிவில் காண்போம்.
ஆரம்பமாக wordpress.org தளத்தில் ‘Community’ மெனு வில் Photo Directory பக்கத்தை தேர்வுசெய்யவும்

Photos Directory பக்கத்தில் நுழைந்ததும் திரையின் வலது மேல் ஓரத்தில் , Login / Register தெரிவை காணலாம்
உங்களிடம் WordPress.org பயனர் தகவல் இருப்பின் அதைவைத்து Login செய்யலாம்
இல்லையேல், புதிதாக ஒரு பயனரை பதிந்து பின்னர் login செய்யலாம். இதனை, எளிதாக சட்டென்று முடித்துவிடலாம்

உள்நுழைந்த பின்னரே உங்களின் புகைப்படங்களை “Contribute” (பங்களிப்பு) லிங்கை தெரிவுசெய்து பதிவிட முடியும்

உங்கள் புகைப்படங்களை சமர்ப்பிக்கும் முன்னர், தவவுகூர்ந்து நெறிமுறைகள் மற்றும் FAQ வை(அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) முழுமையாக படிக்கவும்
நெறிமுறைகள் எந்த வகையான புகைப்படங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்று தெளிவது படுத்தும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ), Photos Directory பற்றிய அறிமுகம் மற்றும் சந்தேகங்களுக்கு விடையளிக்கும்

உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய , உங்கள் கணினியில் இருந்தோ அல்லது கைபேசியில் இருந்தோ ஒரு படத்தை “Choose file” பொத்தானை அழுத்தி தேர்வுசெய்யவும்.
பின்னர் ‘மாற்று உரை’யினை (Alternative Text) பதியவும்
‘மாற்று உரை’ மிகவும் விரிவாக இருப்பது நன்று

பின்னர், உரிமம் மற்றும் பயன்பாடு தெரிவுகள் அனைத்தையும் தேர்வுசெய்யவும்.
இதன் மூலம் நீங்கள் தேர்வுசெய்த அணைத்து விதிகளுக்கும் ஆட்சேபனை அற்ற சம்மதம் அளிக்கின்றீர்கள் என்று ஏற்றுக்கொன்று சமர்ப்பிக்கவும்.

உங்கள் புகைப்படம் பதிவு ஏற்றம் ஆனதும், மதிப்பீட்டிற்கு அனுப்பப்பட்டு. என்னுடைய மூன்று படங்கள் மதிப்பீட்டிற்கு வரிசை படுத்த பட்டுள்ளதை மதிப்பீடு திரையில் காணலாம். அதிகப்படியாக ஒரே நேரத்தில் 5 படங்கள் மதிப்பீட்டிற்கு சமர்ப்பிக்கலாம்
உங்கள் படத்தின் மதிப்பீடு முடிந்ததும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்று உங்கள் மின் அஞ்சலுக்கு தகவல் அனுப்பப்படும்
பதிவு நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நிராகரிப்பை தவிர்க்கலாம்.

உங்களின் படங்கள் கோப்பகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நீங்கள் சமர்ப்பித்த அனைத்து படங்களையும் உங்களுக்கென்றே உருவாக்கபட்ட காப்பக லிங்கில் காணலாம்
என்னுடைய காப்பகத்தை இங்கு காணலாம்
Photos கோப்பகத்தில் அதிகமான பங்களிப்பாளர்களை ஆவலுடன் எதிர்பார்கின்றோ. மேலும் உங்களின் பதிவையும் எதிர்நோக்கியுள்ளோம்